அதிர்ச்சியில் பாமக… அன்புமணியை அடக்க மு.க.ஸ்டாலினுக்கு திட்டம் போட்டுக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்..!

 

அதிர்ச்சியில் பாமக… அன்புமணியை அடக்க  மு.க.ஸ்டாலினுக்கு திட்டம் போட்டுக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்..!

மு.க. ஸ்டாலினை பெரிய தலைவராக காட்ட வேண்டும் என்றால், அதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்டவர்களை சிறுமைப்படுத்தி காட்ட வேண்டும்

அன்புமணியை அடக்க பிரஷாந்த் கிஷோர், மு.க.ஸ்டாலினுக்கு திட்டம் போட்டுக் கொடுத்ததாக பாமக நிர்வாகி அருள் ரத்தினம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர், ’’திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது பிஹாரி பிராமணர் பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் பாதங்களில் சரணடைந்திருப்பது அனைவரும் அறிந்ததுதான். பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் முக்கியமான தந்திரங்களில் ஒன்று – அவர் வேலை செய்யும் கட்சிக்கு எதிராக வலிமையாக இருக்கும் தலைவர்கள் குறித்து பொய்யான செய்திகளை பரப்புவது ஆகும்.anbumani

2014 நாடாளுமன்றத் தேர்தல், பீஹார் தேர்தல், பஞ்சாப் தேர்தல், மணிப்பூர் தேர்தல், ஆந்திர தேர்தல் என பிரசாந்த் கிஷோர் பாண்டே இதற்கு முன்பு வேலை செய்த அனைத்து இடங்களிலும் அவர் இத்தகைய சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். ஹிட்லரின் போய்ச்செய்தி ஆலோசகர் கோயபல்ஸ் காட்டிய அதே வழியை பிரசாந்த் கிஷோர் பாண்டே பின்பற்றுகிறார். இதற்காக பலநூறு கோடி பணம் லஞ்சமாக ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களில் செய்திபரப்பும் கூலிப்படைக்கும் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மு.க. ஸ்டாலினை பெரிய தலைவராக காட்ட வேண்டும் என்றால், அதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்டவர்களை சிறுமைப்படுத்தி காட்ட வேண்டும் – என்பதை பிரசாந்த் கிஷோர் பாண்டே ஒரு உத்தியாக வகுத்துள்ளதாக தெரிகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் கோலோச்சும் மலையாள லாபியை விலைக்கு வாங்கி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்த பொய் செய்தியை வெளியிட செய்திருப்பது இந்த சதியின் ஒரு அடையாளம் ஆகும்.

eps

இதனை சமூக ஊடகங்களில் உடனடியாக பெரிதாக பகிரும்படி 200 ரூபாய்க்கு கூலிக்கு மாரடிக்கும் உபிஸ் கும்பலுக்கு ஆணையிடப்பட்டு, அதன்படி, டைம்ஸ் ஆப் இந்தியா பொய் செய்தியை உபிஸ் கும்பல் சமூக ஊடகங்களில் பெரிதாக பகிர்ந்து சுய அரிப்பை தீர்த்துக்கொண்டது. மறுபக்கம் ஒரு பதிவுக்கு 200 ரூபாய் கூலியும் பெற்றது (பிரசாந்த் கிஷோர் பாண்டே வந்தபிறகும் இந்த பேட்டா உயரவில்லை போலிருக்கிறது).

இந்நிலையில் – பாமகவின் சார்பில், டைம்ஸ் ஆப் இந்தியா நிர்வாகத்தின் ஒப்புதலுடன் அங்கு சென்ற பாமக செய்தி தொடர்பாளர் விநோபா பூபதி, பாமக தரப்பு நியாயங்களை எடுத்துவைத்தார்.

பத்திரிகையில் வந்த பொய் செய்திக்கு எதிராக ஒரு நியாயமான விளக்கத்தை அளிப்பது இயல்பான, தார்மீகமான செயல். மேலும், பாமகவினர் மிரட்டினார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நிர்வாகம் யாரிடமும் கூறவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை. ஒருவேளை உண்மையாகவே மிரட்டப்பட்டிருந்தால், இன்று அது தேசிய அளவில் முக்கியமான செய்தியாக ஆகியிருக்கும்.

ஆனால், எதுவுமே நடக்காத நிலையில், ‘பாமகவினர் பத்திரிகையை மிரட்டினார்கள்’ என்கிற பொய்யான கோயபல்ஸ் செய்தியை வைத்து திமுக கூலிப்படை பலமுனை தாக்குதல் நடத்துகிறது.

திமுகவில் ‘முதல் கலைஞர் தொடங்கி, நான்காம் கலைஞர் வரை’ அனைவருக்கும் சாமரம் வீசிவரும் டி.கே.எஸ் இளங்கோவன், கார்ப்பரேட் கும்பல் அளித்த அவதூறு அறிக்கையை வெளியிட்டார் (இவரது அவதூறு அறிக்கைக்கு வழக்கறிஞர் பாலு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.)

மருமகனிடம் காலம் காலமாக கூலிவாங்கும் கும்பலை சேர்ந்த ஷபீர் அகமது என்பவர், கொந்தளித்து சமூக ஊடகத்தில் எழுதினார். அவரை தொடர்ந்து வரிசையாக கூலிப்படையினர் பூச்சாண்டி காட்டினார்கள்.

பொறுக்கி தின்பதற்காகவே சங்கம் நடத்தும் சாதிவெறி கும்பலை சேர்ந்த சிலர், குடித்துவிட்டு கிழக்கு கடற்கரையில் கும்மாளம் அடிப்பதற்காகவே வைத்திருக்கும் போலி பத்திரிகையாளார் சங்கம் சார்பில் கண்டனம் வெளியிட்டனர்.

கடந்த தேர்தலில் திமுகவிடம் 15 கோடி பணம் வாங்கிய பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) – நடக்கவே நடக்காத சம்பவமான ‘டைம்ஸ் ஆப் இந்தியாவை பாமகவினர் மிரட்டினார்கள்’ என்பதை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டார். (இன்னும் ஒரு 15 கோடி வேண்டும் போலிருக்கிறது!)stalin

“கார்ப்பரேட் அரசியல் – நடப்பது என்ன?”

போலி செய்திக்கு மறுப்பு தெரிவித்ததற்காக – ‘பாமகவினர் பத்திரிகையை மிரட்டினார்கள்’ என்கிற பொய்யான கோயபல்ஸ் செய்தியை வைத்து திமுக கூலிப்படை பலமுனை தாக்குதல் நடத்துகிறது.

அரசியல் ஆலோசகர் பிஹாரி பிராமணர் பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் கார்ப்பரேட் அரசியல் வியூகத்தை செயல்படுத்துவதற்காக திமுக தூக்கி எறியும் பணம் தான் இதன் பின்னணி ஆகும். இந்த ஒரு அவதூறு பொய்ப்பிரச்சத்திற்காக மட்டும் பல கோடிகள் நேற்றும் இன்றும் செலவிடப்பட்டிருக்கும். (முரசொலி மூலப்பத்திரம் விவகாரத்தில் மூக்குடைபட்டதை மூடி மறைப்பதும் இப்போலி பிரச்சாரத்தின் ஒரு நோக்கம் ஆகும்)

இனி தமிழ்நாடு அரசியல் இப்படித்தான் போகும். கார்ப்பரேட் அரசியல் கும்பல் தமிழக ஜனநாயகத்தை சீரழிக்காமல் விடாது. பொறுக்கித்தின்னும் போலி பத்திரிகையாளர் முதல் 15 கோடி பாலகிருஷ்ணன் வரை – திமுக கூலிப்படையினர் இனி பணத்தை வாரி குவிப்பார்கள். இழப்பு தமிழக மக்களுக்கு மட்டுமே!