அதிரடி உயர்வுக்கு பின் இன்று குறைந்தது தங்க விலை!

 

அதிரடி உயர்வுக்கு பின் இன்று குறைந்தது தங்க விலை!

நேற்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில் இன்று தங்க விலை குறைந்துள்ளது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில் இன்று தங்க விலை குறைந்துள்ளது. 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,207க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து  ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.33,656க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50 க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,500க்கு விற்கப்படுகிறது.