அதிரடி உயர்வுக்கு பின்னர் மீண்டும் குறைந்தது தங்க விலை !

 

அதிரடி உயர்வுக்கு பின்னர் மீண்டும் குறைந்தது தங்க விலை !

கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்து நேற்று சுமார் ரூ.31 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தில் இருந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்த தங்க விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்து நேற்று சுமார் ரூ.31 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தில் இருந்தது. இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று மீண்டும் தங்க விலை குறைந்துள்ளது. 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.53 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,843க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.30,744க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51.00க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,200 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.51,000க்கு விற்கப்படுகிறது.