அதிரடியான விலையில் கேலக்ஸி “ஏ60” ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது சாம்சங் !!

 

அதிரடியான விலையில் கேலக்ஸி   “ஏ60” ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது சாம்சங் !!

இந்த ஏ60 ஸ்மார்ட் போனின் திரையனது 6.3 இன்ச்சுடன், கார்னிங் கொரில்லா க்லாஸ் பொருத்தப்பட்டு அற்புதமாக வடிவமைக்கப்படுள்ளது.பின்புறம் மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.

64 ஜிபி இண்டெர்னல் மெமரியுடன் கூடிய கேலக்ஸி ஏ60 என்ற ஸ்மர்ட் போனை வெளியிடுகிறது சாம்சங் நிறுவனம். 

சாம்சங் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பாக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்னல் மெமரியுடன் கூடிய கேலக்ஸி ஏ60 என்ற ஸ்மார்ட் போனை சீனாவில் அறிமுகம் செய்திருந்ததை தொடர்ந்து 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்ட்ர்னல் மெமரியுடன் கூடிய ஏ60 ஸ்மார்ட் போனை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

galaxy a60

சீனாவில் வருகின்ற மே மாதம் 10 ஆம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
128 ஜிபி இண்டெர்னல் மெமரியும், 6 ஜிபி ரேமும் கொண்ட கேலக்ஸி ஏ60 யின் விலை ரூ 20,772 ஆகவும் மற்றும் 64 ஜிபி இண்டெர்னல் மெமரியும், 6 ஜிபி ரேமும் கொண்ட கேலக்ஸி ஏ60 யின் விலை ரூ 15,576 ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த ஏ60 ஸ்மார்ட் போனின் திரையனது 6.3 இன்ச்சுடன், கார்னிங் கொரில்லா க்லாஸ் பொருத்தப்பட்டு அற்புதமாக வடிவமைக்கப்படுள்ளது.பின்புறம் மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. அவை 32 மெகா பிக்சல் + 8 மெகா பிக்சல் + 5 மெகா பிக்சல் ஆகும். முன்புறம் இருக்கும் செல்ஃபி கேமராவானது 32 மெகா பிக்சலுடன் எல்.யி.டி ஃப்லாஷ் லைட்டயும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

galaxy a60

மேலும் இந்த கேலக்சி ஏ60 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதி, அண்ட்ராய்டு 9 பை, பேட்டரி 4500 எம்.ஏ.எச், வை – ஃபை, யு.எஸ்.பி போர்ட், என்.எப்.சி, ஜி.பி.எஸ் பொன்ற பல்வேறு சிறப்புடன் இந்த ஏ60 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.