அதிரடியாக உயர்ந்து வரும் தங்க விலை.. நெஞ்சு வலியே வந்துரும் போல !

 

அதிரடியாக உயர்ந்து வரும் தங்க விலை.. நெஞ்சு வலியே வந்துரும் போல !

நேற்று தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.32 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தை அடைந்தது.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.32 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது. தங்க விலையைக் கேட்டால் பலருக்கு நெஞ்சு வலியே வந்து விடும் என்று இணைய தளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர். 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,072க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.32,576க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.52.40க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.52,400க்கு விற்கப்படுகிறது.