அதிரடியாக உயர்ந்து வரும் தங்க விலை.. மீண்டும் உச்சத்தை எட்டுமோ?!

 

அதிரடியாக உயர்ந்து வரும் தங்க விலை.. மீண்டும் உச்சத்தை எட்டுமோ?!

தங்க விலை கடந்த நான்கு நாட்களாக அதிரடியாக சுமார் ரூ.488 வரை உயர்ந்து வந்து நேற்று குறைந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த நான்கு நாட்களாக அதிரடியாக சுமார் ரூ.488 வரை உயர்ந்து வந்து நேற்று குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் தங்க விலை உயர்ந்துள்ளது. 

gold

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,710க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,680க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.30க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,300க்கு விற்கப்படுகிறது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வெள்ளி விலை 50 ரூபாயை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.