அதிரடியாக உயர்ந்தது தங்க விலை..இன்றைய நிலவரம்!

 

அதிரடியாக உயர்ந்தது தங்க விலை..இன்றைய நிலவரம்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது.

 

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. அதனையடுத்து சற்று குறைந்து வந்த தங்க விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ. 92 உயர்ந்து  ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,108க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.32,864க்கு விற்கப்படுகிறது.

ttn

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.41.70க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.41,700க்கு விற்கப்படுகிறது.