அதிமுக வேட்பாளர் யார்? ஓபிஎஸ் விளக்கம்

 

அதிமுக வேட்பாளர் யார்? ஓபிஎஸ் விளக்கம்

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என நாளை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

தேனி: திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என நாளை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. திருவாரூரை தக்கவைக்க திமுகவும், அந்த தொகுதியை கைப்பற்ற அமமுகவும், அதிமுகவும் கோதாவில் இருப்பதால் இந்த தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பில் பூண்டி கலைவாணனும், அமமுக சார்பில் காமராஜூம் போட்டியிடுகின்றனர். ஆனால் ஆளும் கட்சியான அதிமுக தனது வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.

இந்நிலையில், தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும். இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றீ பெறும் என்றார். முன்னதாக அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து 10-ம் தேதி அறிவிக்கப்படும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருந்தார்