அதிமுக-வில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு

 

அதிமுக-வில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு

முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, தன்னை அதிமுக-வில் இணைத்து கொண்டார்

சென்னை: முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, தன்னை அதிமுக-வில் இணைத்து கொண்டார்.

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரான கஞ்சா கருப்பு, சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். கருப்பு ராஜா எனும் இயற்பெயர் கொண்ட இவரை, தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்தியவர் இயக்குனர் பாலா. பாலாவின் பிதாமகன் திரைப்படம் மூலம் கஞ்சா கருப்பு எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், தமிழ் சினிமாவின் மிகப் பரீட்சயமான காமெடியன் ஆனார்.

ராம், பருத்தி வீரன், நாடோடிகள், சண்டக் கோழி, களவாணி, அறை எண் 305-இல் கடவுள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய கஞ்சா கருப்பு இரண்டாவது வாரம் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, தன்னை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டுள்ளது.