அதிமுக முன்னாள் அமைச்சர் எடுத்த அதிரடி சபதம்… கலக்கத்தில் ஹெச்.ராஜா..!

 

அதிமுக முன்னாள் அமைச்சர் எடுத்த அதிரடி சபதம்… கலக்கத்தில் ஹெச்.ராஜா..!

இந்தத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் கணிசமாக இருக்கக்கூடிய யாதவர் சமுதாய வாக்குகள் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஹெச்.ராஜாவுக்கு கிடைக்காது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

அதிமுகவை தோற்கடித்தே தீருவேன் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் சபதமிட்டு தர்மயுத்த நாயகர்களை தவிடுபொடியாக்க கிளம்பி இருக்கிறார்.

ராஜகண்ணப்பன் தனது சமுதாயமான யாதவர்கள் மத்தியில் அசைக்க முடியாத முக்கிய தலைவராக இருக்கிறார். தற்போது அதிமுக தலைமை மீதான அதிருப்தியால், தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். கடந்த முறை முதுகுளத்தூர் எம்.எல்.ஏ தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமியின் மனைவி கீர்த்திகா வேட்பாளராக களமிறங்கினார்.

szf

அப்போது ராஜகண்ணப்பன் அதிமுகவிற்கு எதிராக இருந்ததால், அவரது சமுதாய வாக்குகள் கிடைக்காமல் கீர்த்திகா தோல்வி அடைந்து விட்டார். எனவே, இந்த முறை ராமநாதபுரம், சிவகங்கை மக்களவை மற்றும் பரமக்குடி, மானாமதுரை இடைத்தேர்தல்களில், எதிராக 
பிரசாரம் செய்ய வேண்டாமென ராஜகண்ணப்பனிடம் அதிமுக மாவட்ட செயலாளர் பேசினாராம். இதனை ஏற்க மறுத்த ராஜகண்ணப்பன், அதிமுக தோற்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன். என் பிரசாரத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது’’ எனக் கூறிவிட்டாராம்.

dshh

இதனால் இந்தத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் கணிசமாக இருக்கக்கூடிய யாதவர் சமுதாய வாக்குகள் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஹெச்.ராஜாவுக்கு கிடைக்காது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ராஜகண்ணப்பன் முடிவால் ஹெச்.ராஜாவுக்கு சிறிது 
பின்னடைவு ஏற்படுவது நிச்சயம்..!

இதையும் வாசிங்க

தி.மு.க -அ.தி.மு.க ரெண்டுக்கும் கொஞ்சமாவது புத்தி வந்திருக்கும்னு நினைக்கிறேன் -கமல்ஹாசன்!