அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் இவர்கள்தானாம்? வெளியான தகவல்!

 

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் இவர்கள்தானாம்? வெளியான தகவல்!

இதற்கான வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய 13-ந் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ராஜ்யசபாவில்  தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய எம்பிகளுக்கான தேர்தல் வரும்  26-ந் தேதி   நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய 13-ந் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அ. தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கே.பி. முனுசாமி கட்சியில் மூத்த தலைவராக உள்ளார். இருப்பினும்  அவருக்கு ஆட்சியில் எந்த பொறுப்பும் இல்லை. இதனால் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.

tn

அதேபோல் தம்பிதுரை லோக் சபா தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தாலும்  டெல்லி அவருக்கு பரிட்சியமான இடம் என்பதால் அவர் பெயரும் இடம்பிடித்துள்ளதாம். அதேசமயம் கூட்டணி கட்சிகளான  தேமுதிக சுதீஷ், ஏ.சி. சண்முகம், ஜி.கே. வாசன் ஆகியோர் சீட் கேட்டுநச்சரிக்க, இறுதியாக ஜிகே வாசன் பெயரே பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.