அதிமுக கூட்டணிக்குள் கட்டிப்பிடி வைத்தியம்… திமுக கூட்டணிக்குள் விரட்டி அடி வைத்தியம்..!

 

அதிமுக கூட்டணிக்குள் கட்டிப்பிடி வைத்தியம்… திமுக கூட்டணிக்குள் விரட்டி அடி வைத்தியம்..!

உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக சீட் கொடுக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள். 

vasan

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறத்து த.மா.கா., நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தொகுதிக்கு ஒருநாள் என இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்தார். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக த.மா.கா.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கோவை தங்கமும், விடியல் சேகரும், வாக்காளர்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து, ‘அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடணும்’ என பிரசாரம் செய்தார்கள்.

edappadi

இதனால் நெகிழ்ந்து போய்  கோவை தங்கத்தையும், விடியல் சேகரையும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சர்கள் ரொம்பவே பாராட்டி இருக்கிறார்கள். இதனால், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி அமைத்து த.மா.கா.,வுக்கு கணிசமான இடங்களை அ.தி.மு.க., ஒதுக்கும் என நம்பிக்கையாக இருக்கிறார்கள். இதனால், அதிமுக- தமாகா கூட்டணி ஃபெவிகால் போட்டு ஒட்டப்பட்ட கூட்டணியாக தற்போது இணைந்து செயலாற்றி வருகிறது.

Thirumavalan

 அதே சமயம் வன்னியர் வாக்கு வங்கியை பெற இடஒதுக்கீட்டை அறிவித்து தலித்துகளை அதிருப்தி அடையச் செய்ததால் விக்கிரவாண்டியில் திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் காரணமாகி விட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளது திமுக கூட்டணியில் கசப்பை ஏற்படுத்தி உள்ளது.