அதிமுக எம்பி காமராஜ் சென்ற கார் கவிழ்ந்து விபத்து!

 

அதிமுக எம்பி காமராஜ் சென்ற கார் கவிழ்ந்து விபத்து!

அதிமுக எம்பி காமராஜ் விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் லேசான காயங்களுடன் தப்பினார்.

சேலம்: அதிமுக எம்பி காமராஜ் விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் லேசான காயங்களுடன் தப்பினார்.

சேலம் கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியாக உள்ளவர் காமராஜ். இவர் சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது  மின்னாம்பள்ளி  அருகே எம்பி சென்ற காரின் டயர் வெடித்து கார் கவிழ்ந்தது. இதில் அதிமுக எம்பி காமராஜுக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

kamaraj

இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர்  வீடு திரும்பினார். அமைச்சர் காமராஜ்  சீட் பெல்ட் அணிந்துகொண்டு காரில் பயணம் செய்ததால் பெரும் விபத்திலிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.

kamaraj

முன்னதாக திண்டிவனம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.