அதிமுக அரசுக்கு எதிராக ஊழல் புகார்களை அடுக்கும் பாஜக: ஆட்டம் காணும் கூட்டணி?

 

அதிமுக அரசுக்கு எதிராக ஊழல் புகார்களை அடுக்கும் பாஜக: ஆட்டம் காணும் கூட்டணி?

அதிமுக அரசின் செயல்பாடுகளை பாஜக விமர்சித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக அரசின் செயல்பாடுகளை பாஜக விமர்சித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது. இருப்பினும் அந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பாஜகவும் மண்ணை கவ்வியது. தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் பாஜக இன்னும் வெளிப்படையான ஆதரவை  அதிமுக கட்சிக்கு அளிக்கவில்லை. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

edappadi

இந்நிலையில் அதிமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் விதத்தில் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. அதன்படி, மணல் கொள்ளையைக் குறிப்பிட்டு வகையில்,  உயர்நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தமிழக அரசின் ‘சிஸ்டம்’ எப்படி இந்த சட்டவிரோத நடவடிக்கையை அனுமதிக்கிறது என தெரியவில்லை என்றும் மதுரையில் போடாத சாலையை போட்டதாக ஒப்பந்ததாரர் கூறுவதை குறித்து, அகப்பட்டதைச் சுருட்டிக்கொள்ளப் பார்க்கிறதா மாநில அரசு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இது அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  தமிழக பாஜக ஐடி அணி தலைவர் நிர்மல் குமார், ஊழல் புகார்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இதுபோன்ற பதிவுகள் பதிவிடப்படுவதாக விளக்கமளித்துள்ளார். 

தமிழகத்தில் செல்வாக்கை உயர்த்த, பாஜக திட்டம் தீட்டி வரும் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு நிலையான இடத்தை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அதிமுக அரசை சாடி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.