அதிமுக – அமமுக இணைக்க பாஜக முயற்சிக்கவில்லை: எல்.முருகன்

 

அதிமுக – அமமுக இணைக்க பாஜக முயற்சிக்கவில்லை: எல்.முருகன்

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா கடந்த 27 ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்தார். தற்போது தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அவர், தமிழகத்துக்கு வந்து அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கூறப்படுகிறது. இதனைடையே சசிகலாவின் அரசியல் வருகையை பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். சசிகலா அரசியலுக்கு வருவாரா? இல்லையா? அதிமுகவுடன் இணைவாரா? அதிமுக -அமமுக இணையுமா? அதிமுகவில் பிளவு ஏற்படுமா என்பதெல்லாம் விவாதமாகியுள்ளது.

அதிமுக – அமமுக இணைக்க பாஜக முயற்சிக்கவில்லை: எல்.முருகன்

இந்நிலையில் சேலத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எல் முருகன், “இது தமிழக வளர்ச்சிக்கான பட்ஜெட். சிறப்பான பட்ஜெட். வரலாற்றிலேயே இப்படி ஒரு பட்ஜெட்டை பார்த்திருக்க முடியாது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாடுகள், மெட்ரோ, ஹார்பர் உள்ளிட்டவற்றிற்கு பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் இல்லை. பட்ஜெட்டை வரவேற்க மனதில்லாமல் ஸ்டாலின் விமர்சிக்கிறார். தமிழகத்தில் அனைவருக்கும் வீடு, முத்ரா, கழிவறை திட்டம், பயிர்க்காப்பீடு திட்டம் உள்ளிட்ட பாஜகவின் திட்டங்களை முன்னிறுத்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்வோம்.

39 திமுக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மக்களின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை. இவர்களெல்லாம் மக்களின் குறைத்தீர்ப்பு கூட்டம் நடத்தியது. சசிகலா வரும்போது பார்த்துக்கொள்ளலா. அதிமுக அமமுகவை இணைக்க பாஜக எந்த முயற்சியும் எடுக்கவில்லை” எனக்கூறினார்.