அதிமுகவை பாதி பாதி பிரித்துக் கொண்ட ஓ.பி.எஸ்- எடப்பாடி… கமுக்கமாக ஒப்பந்தம்..!

 

அதிமுகவை பாதி பாதி பிரித்துக் கொண்ட ஓ.பி.எஸ்- எடப்பாடி… கமுக்கமாக ஒப்பந்தம்..!

இவர் ஏரியாவில் அவர் தலையிட மாட்டார், அவர் ஏரியாவில் இவர் தலையிடக் கூடாது என்பது தான் ஒப்பந்தம்.

வடக்கு உனக்கு, தெற்கு எனக்கு என்று என உள்ளாட்சித் தேர்தலில் சீட்ப் ஒதுக்குவதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸூம் பிரித்துக் கொண்டுள்ளனர். 

உள்ளாட்சி தேர்தலில் தெற்கு மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான வேட்பாளர்களை ஓ.பி.எஸும்,  கொங்குமண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் எடப்பாடியும் வேட்பாளர்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். அதன்படி இவர் ஏரியாவில் அவர் தலையிட மாட்டார், அவர் ஏரியாவில் இவர் தலையிடக் கூடாது என்பது தான் ஒப்பந்தம். edappaadi

மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களாக இருப்பவர்கள் கண்டிப்பாக அவர்கள் இருக்கும் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகளை எப்படியும் ஆளுங்கட்சி கைப்பற்ற வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் நீங்கள் வெறும் எம்எல்ஏவாக மட்டுமே இருக்க முடியும். புதியவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று டார்கெட் கொடுத்து இருக்கிறார்கள்.

 பிறகு சாம,பேத, தண்டம் எடுக்க தயங்காத நபர்களை உள்ளாட்சி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு போட்டு இருக்கிறார்கள். இதையே காரணம் காட்டி மாவட்ட செயலாளர்கள் பெரும் அளவு கரன்சி பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.