அதிமுகவை நம்பாத ஏ.சி.சண்முகம்… வேலூரில் பரபரக்கும் தேர்தல் களம்..!

 

அதிமுகவை நம்பாத ஏ.சி.சண்முகம்… வேலூரில் பரபரக்கும் தேர்தல் களம்..!

இதனால் உஷாரான ஏ.சி.சண்முகம், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ’அவர் வேண்டாம். என் சார்பில் தேர்தல் பணிக்கு சிலரை பயன்படுத்திக் கொள்கிறேன்.

வேலூரில் மக்களவை தேர்தல் இன்னும் கலைகட்டவில்லை.  வேட்பாளர்கள் மட்டும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இன்னும் தேர்தல் என்ற உணர்வு தொண்டர்களிடையே வரவில்லை. எனவே, ரொம்ப மந்தமாகவே காணப்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கு பதிலாக வருமான வரித்துறையினர் செல்போன், வங்கியில் பணம் எடுப்பது, பைனான்ஸ், பார்சல்கள் என கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகின்றனர்.

A C Shanmugam

 சிறு தகவல் கிடைத்தாலும் அந்த வீட்டை ரவுண்டு கட்டி விடுகிறார்கள். அதே சமயம் அதிமுக தரப்பில் அனைத்து அத்துமீறல்களும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. அதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதிகாரிகள் ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று செயல்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. shanmugam

வேலூரில் வெற்றி பெற வைக்கும், பொறுப்பை அமைச்சர் வீரமணியிடம்  ஒப்படைத்த தொகுதிகளில் எல்லாம் அதிமுக மண்ணை கவ்வியது. பணம் இருந்தால் மட்டும் போதாது தொண்டர்களை பக்குவமாக கையாள தெரிய வேண்டும். அது இல்லாத காரணத்தால்தான் ஒரு இடைத்தேர்தல் தொகுதி மற்றும் எம்பி தொகுதிகள் மொத்தமாக அதிமுக விட்டு கை நழுவி போனது. இதனால் உஷாரான ஏ.சி.சண்முகம்,  எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, ’அவர் வேண்டாம். என் சார்பில்  தேர்தல் பணிக்கு  சிலரை பயன்படுத்திக் கொள்கிறேன்.veeramani

 நீங்களும் வந்து பிரசாரம் செய்து தர வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தாராம். அதை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி ’கண்டிப்பாக உங்களுக்காக நான் நேரடியாக வந்து வேலூரில் தங்கி பிரசாரம் செய்கிறேன். அவர் சும்மா இருக்கட்டும்’’ என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.