அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாமக? ஜெயக்குமார் கொடுத்த க்ளூ!

 

அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாமக? ஜெயக்குமார் கொடுத்த க்ளூ!

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமகவை வருக வருக என்று அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றுள்ளார்.

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமகவை வருக வருக என்று அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றுள்ளார்.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தாலும், கூட்டணி இல்லாமல் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்துதான் இருக்கிறார் என்று பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதன் எதிரொலியாக நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பாமக யாரிடமும் பேச தொடங்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டைக் கூறுவோம் என்று அன்புமணி அடிக்கடி கூட்டணி குறித்து பேசி வருகிறார். 

jayakumar

இதை தொடர்ந்து  2019ஆம் ஆண்டு ஆளுநர் உரையின் மீதான ராமதாஸின் அறிக்கையில், பல்வேறு திட்டங்களை பாராட்டி எழுதியிருந்தார். இதனால் பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க போவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் கூட்டணிக்கு பா.ம.க அதிமுகவுடன் பேச்சு நடத்துகிறதா என்கிற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘கூட்டணிக்காக எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது. திமுக, அமமுக தவிர யாரும் கூட்டணிக்கு வரலாம். அவர்கள் அனைவரும் வருக வருக’ என்றார்.