அதிமுகவுடனான கூட்டணியை தேசிய தலைமைதான் முடிவு செய்யும்: எல். முருகன்

 

அதிமுகவுடனான கூட்டணியை தேசிய தலைமைதான் முடிவு செய்யும்: எல். முருகன்

பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கடந்த நவம்பர் மாதம் 6- ஆம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரை டிசம்பர் 7- ஆம் தேதி அன்று திருச்செந்தூரில் நிறைவடைகிறது. விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்தநிலையில் இன்றைய தினம் முருகனின் 6 வது படைவீடான மதுரை அழகர்கோயில் பகுதியில் உள்ள பழமுதிர்ச்சோலையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முருகனின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுப்பாக வந்து பாஜக மாநில தலைவர் எல் முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.

அதிமுகவுடனான கூட்டணியை தேசிய தலைமைதான் முடிவு செய்யும்: எல். முருகன்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், “பாஜக சார்பில் தற்போது நடைபெற்று வரும் வெற்றி வேல்யாத்திரையானது தமிழக மக்களின் பேராதரவோடு வெகு சிறப்பாக நடைபெற்றது. திட்டமிட்டபடி வேல்யாத்திரை நாளை மறுநாள் திருச்செந்தூரில் நிறைவு செய்யப்பட உள்ளது. அதில் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் கலந்து கொள்ளவுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நாடாளுமன்றத்தில் தொடங்கிய கூட்டணி தொடரும் என்று கூறினார்கள். ஆனால் கூட்டணி குறித்த அறிவிப்பை தேசிய தலைமைதான் வழங்கும்” எனக் கூறினார்.