அதிமுகவில் இணையப்போவதாக வெளியான செய்திக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதில்!

 

அதிமுகவில் இணையப்போவதாக வெளியான செய்திக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதில்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நாக்கு கட்டவிழ்க்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளில் ஓரளவுக்கு தெளிவாகவும், தீர்க்கமாகவும் பேசிவந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு, அவரது தடாலடி பேச்சே தினகரனுடனான நட்பில் இடைவெளியை அதிகரித்துவிட்டது. இதற்கிடையே தொலைகாட்சி பேட்டி ஒன்றில் பேசிய தங்கம், “எடப்பாடி அரசு பிளாஸ்டிக்கை ஒழித்தது வரவேற்கத்தகக்து” என்றார்

ஜெயலலிதா காலத்தில் இருந்தே தேனியில் பன்னீர்செல்வத்துக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் ஆகாது. பன்னீர்செல்வம் ஜெயலலிதா அணி என்றால், தங்கம் சசிகலா அணி. பன்னீரின் கண்களை உறுத்திக்கொண்டிருக்கும் துரும்பாகவே தங்கம் வளர்த்தெடுக்கப்பட்டார். தினகரன் தனி அணி கண்டபோதும், பின் தனி கட்சி கண்டபோதும் அவருடனேயே கடந்துவந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெருவாரியான வாக்குகள் வித்தியாச தோல்வியும், தமிழகம் முழுக்க தோற்றாலும் தேனியில் மட்டும் ஜெயித்த அதிமுகவின் வியூகமும், தொடர் தோல்விகளும் தங்க தமிழ்ச்செல்வனை சற்றே யோசிக்க வைத்திருப்பதாக செய்தி.

Thanga ThamilSelvan

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நாக்கு கட்டவிழ்க்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளில் ஓரளவுக்கு தெளிவாகவும், தீர்க்கமாகவும் பேசிவந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு, அவரது தடாலடி பேச்சே தினகரனுடனான நட்பில் இடைவெளியை அதிகரித்துவிட்டது. இதற்கிடையே தொலைகாட்சி பேட்டி ஒன்றில் பேசிய தங்கம், “எடப்பாடி அரசு பிளாஸ்டிக்கை ஒழித்தது வரவேற்கத்தகக்து” என்றார். எலி எட்டு முழ வேஷ்டி கட்டுவதன் அர்த்தத்தை உணர்ந்தவர்கள், தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் அதிமுகவில் இணைவார் அதுவும் கண்டிப்பாக எடப்பாடி அணியில்தான் இணைவார் என்றனர். இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செலவன் தான் அதிமுகவில் இணையப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. சிலர் வேண்டுமென்றே, இதுபோன்ற உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளார். எனக்கும் அவருக்கும் இடையே இருப்பது காதல் இல்லை, நல்ல நட்புதான் என கிசுகிசுவில் சிக்கிய நடிகை அளிக்கும் விளக்கம் போலவே தோன்றுவது எனக்கு மட்டும்தானா?