அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி!

அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி!

புகழேந்தி உள்ளிட்ட அமமுக அதிருப்தியாளர்கள் முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சேலத்தில் புகழேந்தி முன்னிலையில் நடைபெற்ற அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

புகழேந்தி

கடந்த சில நாட்களுக்கு முன் அமமுக கட்சி நிர்வாகி புகழேந்தி சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுகவில் இணைவது குறித்து தான் புகழேந்தி எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று பரபரப்பு தகவல்கள் வெளிவந்த நிலையில், அமமுகவில் அதிருப்தி இருப்பது உண்மைதான் ஆனால் அதிமுகவில் இணைய வரவில்லை என தெரிவித்தார். ஆனால் தற்போது அதிமுகவில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.