அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு தாவினார் நடிகை நமீதா!

 

அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு தாவினார் நடிகை நமீதா!

பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடிகை நமீதா பாஜகவில் இணைந்தார்.

பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடிகை நமீதா பாஜகவில் இணைந்தார்.

நடிகை நமீதா ஜெயலலிதா இருக்கும் போது அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுகவில் இணைந்தார். அதுமட்டுமின்றி அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டார். நட்சத்திர பேச்சாளர்களாகவும் ஜொலித்த நடிகை நமீதா, தமிழகம் வந்துள்ள பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இன்று காலை நடிகர் ராதா ரவி அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்ற நிலையில் மாலை நடிகை நமீதாவும் பாஜகவில் இணைந்துள்ளார். 

Namitha

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நமீதா கடந்த சில நாட்களாக படவாய்ப்பு ஏதுமின்றி, இருக்கிறார். படவாய்ப்புக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிட்டதக்கது.