‘அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்’ – ஸ்டாலின் கடும் தாக்கு

 

‘அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்’ – ஸ்டாலின் கடும் தாக்கு

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செயல்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை: அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செயல்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் பேசியிருந்தார்.

நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே, இவ்வாறு பகிரங்கமாக பேசியிருப்பது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது.

இதுகுறித்து ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக ஆளுநரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஆளுநரின் இந்த பேச்சு வேதனையளிக்கிறது.

இது தொடர்பாக அவரிடம் பேச நேரம் கேட்டுள்ளோம். மழையை காரணம் காட்டி இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குறியது. தேர்தல் நடைபெற்றால் தோல்வி நிச்சயம் என்ற பயத்தில் அதிமுக அஞ்சுகிறது. அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் போல் செயல்படுகிறார் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்” என கடுமையாக சாடியுள்ளார்.