அதிமுகவின் கழகச் செய்தித் தொடர்பாளராக  புகழேந்தி நியமனம்!

அதிமுகவின் கழகச் செய்தித் தொடர்பாளராக  புகழேந்தி நியமனம்!

நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி படுதோல்வி சந்தித்ததையடுத்து அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி அதிமுக மற்றும் திமுக கட்சிகளில் இணைந்தார்கள்.

நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி படுதோல்வி சந்தித்ததையடுத்து அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி அதிமுக மற்றும் திமுக கட்சிகளில் இணைந்தார்கள்.

 தேர்தலுக்கு முன்பே செந்தில் பாலாஜி, கலையரசன், தங்க தமிழ்ச்செல்வன்  உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து விலகிய நிலையில் சேர்தலுக்கு பின்  புகழேந்தி அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இது தினகரன் தரப்பிற்கு பெரும் அடியாக இருந்தது.  இதையடுத்து புகழேந்தி  தலைமை கழக பேச்சாளராக இருந்தார். 

இந்நிலையில்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அதிமுகவின் கழகச் செய்தித் தொடர்பாளராக  புகழேந்தி (கர்நாடக மாநிலம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்றும் கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம் என்றும்  அறிவித்துள்ளனர்.