அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போர்க்கொடி!

அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போர்க்கொடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 4 பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இனவெறி கருத்து வெளியிட்டதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 4 பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இனவெறி கருத்து வெளியிட்டதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 4 காங்கிரஸ் பெண் பிரதிநிதிகளை அவர்களது நாட்டுக்கே திரும்ப சென்று அங்குள்ள குற்றங்களை சரிசெய்துவிட்டு பின் இங்கு வந்து பேசுங்கள் என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது. இதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெலோசியையும் குறிப்பிட்டுள்ளார். பொலோசி , டி-காலிஃப் ஆகியோர் ட்ரம்ப்பின் ட்விட்டை நாட்டை பிரிக்கும் செயல் , பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் ட்ரம்ப் என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ‘அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கு மட்டுமே’ என்ற கொள்கையுடன், இனரீதியிலான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இதற்கு சர்வதேச அளவில் கண்டனம் வலுத்த நிலையில், அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பிலும், நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 240 பிரதிநிதிகள் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் பெண் எம்.பிக்கள் வலியுறுத்தினர்.