அதிபராக பதவியேற்றதுடன் கோத்தபய ராஜபக்ச செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் எங்கு தெரியுமா?

 

அதிபராக பதவியேற்றதுடன் கோத்தபய ராஜபக்ச செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் எங்கு தெரியுமா?

69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றுள்ளார்.  இதையடுத்து கோத்தபய ராஜபக்சவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்

இலங்கை அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசவும், இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் மகேந்திர ராஜபக்ச  சகோதரர் கோத்தபய ராஜபக்சவும்  போட்டியிட்டனர்.    இதில்  இவர்கள் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில், கோத்தபய ராஜபக்ச முன்னிலை வகித்து அதிபர் தேர்தலில் வென்றுள்ளார்.மொத்தம் 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றுள்ளார்.  இதையடுத்து கோத்தபய ராஜபக்சவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

rajapakse

இந்நிலையில் பிரதமர் மோடியும் கோத்தபய ராஜபக்சவுக்கு வாழ்த்து கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள கோத்தபய ராஜபக்ச, மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்குச் செல்வேன் என்று அறிவித்துள்ளார்.

gotapaaya

அதன்படி, கோத்தபய ராஜபக்ச அதிபராகப் பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.