அதிக விலை கொடுத்து கொரோனா சோதனைக் கருவிகளை சீனாவில் இருந்து வாங்கியதா இந்தியா?

 

அதிக விலை கொடுத்து கொரோனா சோதனைக் கருவிகளை சீனாவில் இருந்து வாங்கியதா இந்தியா?

கொரோனா வைரஸிற்கான விரைவான ஆன்டிபாடி சோதனைகளுக்கான கருவிகளை வாங்க இந்தியா இரட்டிப்பாக விலை செலுத்தியது.

கொரோனா வைரஸிற்கான விரைவான ஆன்டிபாடி சோதனைகளுக்கான கருவிகளை வாங்க இந்தியா இரட்டிப்பாக விலை செலுத்தியது. மேலும் இந்த கருவி தவறான முடிவுகளை காண்பித்ததால் இதை வாங்குவது பல மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய விநியோகஸ்தரான ரியல் மெட்டோபாலிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிக விலையில் அரசாங்கத்திற்கு கொரோனா சோதனைக் கருவிகள் விற்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தருக்கும், இறக்குமதியாளருக்கும் இடையிலான டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த சட்ட மோதலில் இருந்து இது அம்பலமாகி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மூலம் மார்ச் 27 அன்று சீன நிறுவனமான வோண்ட்ஃபோவிடம் இருந்து ஐந்து லட்சம் விரைவான ஆன்டிபாடி சோதனை கருவிகளை ஆர்டர் செய்திருந்தது.

ttn

ஏப்ரல் 16 ம் தேதி, சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில் விரைவான ஆன்டிபாடி சோதனைகள் மற்றும் ஆர்.என்.ஏ பிரித்தெடுத்தல் கருவிகள் உட்பட 650,000 கிட்டுகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக ட்வீட் செய்தார். இந்த சோதனைக் கருவிகளில் ஒரு கருவியின் விலை ரூ.245 என சீனாவிலிருந்து இறக்குமதியாளர் மேட்ரிக்ஸ் வாங்கியது. ஆனால், விநியோகஸ்தர்களான ரியல் மெட்டபாலிக்ஸ் மற்றும் ஆர்க் பார்மாசூட்டிகல்ஸ் ஆகியவை இந்த கிட்களை அரசாங்கத்திற்கு தலா ரூ.600 விற்றுள்ளன. அதாவது 60 சதவீதம் அதிக விலை வைத்து விற்கப்பட்டுள்ளது.

ttn

அதே இறக்குமதியாளரான மேட்ரிக்ஸிடமிருந்து மற்றொரு விநியோகஸ்தர் ஷான் பயோடெக் மூலம் தமிழக அரசு சீன கிட்களை தலா ரூ.600-க்கு வாங்கியபோது சிக்கல் தொடங்கியது. தமிழகத்திற்கும் ஷான் பயோடெக்கிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட கொள்முதல் ஆணை வெளியாகியுள்ளது. ரியல் மெட்டபாலிக்ஸ் பின்னர் உயர்நீதிமன்றத்திற்கு மேட்ரிக்ஸ் இறக்குமதி செய்த கிட்களுக்கான பிரத்யேக விநியோகஸ்தர் என்று கூறி, ஒப்பந்தத்தை மீறி தமிழகத்திற்கு மற்றொரு விநியோகஸ்தரை (ஷான் பயோடெக்) ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டியது. நீதிமன்றம் இந்த சர்ச்சையை விசாரித்து ஒரு கருவியின் ரூ.400 ரூபாயாகக் குறைக்க உத்தரவிட்டது.