அதிக சுமையுடன் வந்த லாரி… சோதனை செய்து கடுப்பான போலீசார்! அப்படி அதுல என்ன இருந்ததுன்னு நீங்களே பாருங்க!

 

அதிக சுமையுடன் வந்த லாரி… சோதனை செய்து கடுப்பான போலீசார்! அப்படி அதுல என்ன இருந்ததுன்னு நீங்களே பாருங்க!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். அதே போல போக்குவரத்தும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. அதாவது, அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை தவிர வேறு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், மற்ற வாகனங்கள் ஏதேனும் செல்கிறதா என்பதை கண்காணிக்க சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ttn

இந்நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக சுமையை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த வண்டியை மடக்கிய போலீசார், அந்த லாரியில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி பண்டல்கள் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் டிரைவரிடம் மேற்கோண்ட விசாரணை மேற்கொண்டதில், அந்த லாரி அனுமதியின்றி திருப்பூர்  செல்லவிருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.