அதிகாரிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… மதுரை மாநகராட்சியில் புதிய திட்டம் அறிமுகம்!

அதிகாரிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… மதுரை மாநகராட்சியில் புதிய திட்டம் அறிமுகம்!

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் பற்றி பொது மக்கள் புகார் கூறினால், அது சரி செய்யப்பட்டு குறைகள் சரி செய்யப்பட்டுவிட்டது என்று புகார் கூறியவர் ஒப்புதல் அளிக்கும் வரையில் அதிகாரிகளை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “மதுரை மாநகராட்சியில் 100 வார்டு மக்களும் தங்கள் அடிப்படை வசதி குறித்த குறைகளை வாட்ஸ்ஆப், தொலைப்பேசி மூலம் தெரிவிக்க மாநகராட்சியில் புகார் மையம் செயல்படுகிறது. தினமும் 3 ஆயிரம் புகார்கள் பெறப்படுகின்றன.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் பற்றி பொது மக்கள் புகார் கூறினால், அது சரி செய்யப்பட்டு குறைகள் சரி செய்யப்பட்டுவிட்டது என்று புகார் கூறியவர் ஒப்புதல் அளிக்கும் வரையில் அதிகாரிகளை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

madurai

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “மதுரை மாநகராட்சியில் 100 வார்டு மக்களும் தங்கள் அடிப்படை வசதி குறித்த குறைகளை வாட்ஸ்ஆப், தொலைப்பேசி மூலம் தெரிவிக்க மாநகராட்சியில் புகார் மையம் செயல்படுகிறது. தினமும் 3 ஆயிரம் புகார்கள் பெறப்படுகின்றன. இப்புகார்களை விரைந்து பெறவும், உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் புதிய தொழில்நுட்பத்தை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. 
இம்முறையில் புகார் மையத்தின் அலைபேசி எண் 84284 25000 கால் சென்டர் போல செயல்படும். இதில் தெரிவிக்கும் புகார் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பப்படும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு புகார் அனுப்பப்பட்டுவிட்டது என்ற தகவல் புகார்தாரருக்கு தெரிவிக்கப்படும். உடனடியாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்வார். குறையை நிவர்த்தி செய்ததை பிறகு அது பற்றி அவர் மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும். அவர் அப்படி பதிவு செய்த உடன் தானாகவே கணினி மூலம் புகார்தாரரின் அலைபேசிக்கு அழைப்பு செல்லும்.

call center

புகார் தீர்க்கப்பட்டதை அவர் உறுதி செய்து பதில் அளிக்க வேண்டும். அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட முடியாது. ஏனென்றால் புகார் பதிவு செய்யப்பட்டதில் இருந்து அவரது ‘கவுன்டவுன்’ துவங்கிவிடும். பதில் அளித்த பின்னரே புகார் பற்றிய பதிவு முடித்து வைக்கப்படும்.
தமிழகத்திலேயே முதன் முறையாக இங்கு இத்தொழில்நுட்பத்தை மதுரை மாநகராட்சியில் அறிமுகம் செய்துள்ளோம். அடிப்படை வசதியான குடிநீர், கழிவுநீர் உள்ளிட்டவை குறித்த புகார்களை தெரிவிக்கலாம்’ என்றார்.