அதிகாரப்பூர்வமாக வெளியேறிய சிவ சேனா…. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காது- சஞ்சய் ரவுத் தகவல்

 

அதிகாரப்பூர்வமாக வெளியேறிய சிவ சேனா…. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காது- சஞ்சய் ரவுத் தகவல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறஉள்ளது. இதில் சிவ சேனா பங்கேற்காது என அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

சிவ சேனாவின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான சஞ்சய் ரவுத் நேற்று இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சி (சிவ சேனா) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி சில பேரின் சொத்து கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கியமான நிறுவனர்கள் சிவ சேனா மற்றும் அகாலி தளமும்தான்.

தேசிய ஜனநாயக கூட்டணி (கோப்பு படம்)

அந்த கூட்டம் (தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சந்திப்பு) நவம்பர் 17ம் தேதி நடைபெற இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். மகாராஷ்டிராவில் எடுத்து வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு நாங்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என ஏற்கனவே முடிவு செய்து விட்டோம். எங்களது அமைச்சரும் மத்திய அரசலிருந்து ராஜினாமா செய்து விட்டார்.

சிவ சேனா

தேசிய ஜனநாயக கூட்டணி சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு என் கட்சிக்கு அழைப்பு விடுவிக்கவில்லை என  கேள்விப்பட்டேன். அழைப்பு விடுவிக்கவில்லை என்றாலும் அது நல்லதுதான். நாங்கள் ஏற்கனவே முடிவு (கூட்டத்தில் பங்கேற கூடாது) எடுத்து விட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் உரிமையாளர் உரிமையாளர் உரிமையை யாராலும் கோர முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணி சில பேரின் சொத்து கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நிறுவனர்கள் பால் தாக்கரே (மறைந்த சிவ சேனா நிறுவனர்) மற்றும் அகாலிதளம். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டோம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.