அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார் புகழேந்தி! 

 

அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார் புகழேந்தி! 

புகழேந்தி உள்ளிட்ட அமமுக அதிருப்தியாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்திருப்பதாக வந்த தகவலையடுத்து இன்று  முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

புகழேந்தி உள்ளிட்ட அமமுக அதிருப்தியாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்திருப்பதாக வந்த தகவலையடுத்து இன்று  முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

கடந்த சில நாட்களுக்கு முன் அமமுக கட்சி நிர்வாகி புகழேந்தி சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுகவில் இணைவது குறித்து தான் புகழேந்தி எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று பரபரப்பு தகவல்கள் வெளிவந்த நிலையில், அமமுகவில் அதிருப்தி இருப்பது உண்மைதான் ஆனால் அதிமுகவில் இணைய வரவில்லை என தெரிவித்தார். அதன்பின் அமமுகவில் அதிருப்தி ஏற்பட்டதாகவும், புறம்போக்கு இடத்தில் உள்ள ஒரு கம்பெனி போல டிடிவி தினகரன் கட்சியை நடத்துவதாகவும் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினார். 

புகழேந்தி

இந்நிலையில் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அவருடைய அதிருப்தியாளர்களும் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தனர். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “எங்கோ ஒரு சில இடங்களில் அமமுகவின் வேட்பாளர்கள் தனிப்பட்ட செல்வாக்கினால் வெற்றி பெற்றுவிட்டதால் அமமுக 3வது பெரிய கட்சியெல்லாம் ஆகிவிட முடியாது. அமமுக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றது என டிடிவி.தினகரனை சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுகவால் வெற்றிபெற இயலாது. தேர்தல் ஆணையத்தில் அமமுக பதிவு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நிச்சயம் அமமுக கட்சியாக பதிவு செய்ய முடியாது. சசிகலாவிடம், டிடிவி.தினகரன் என்னை ஏமாற்றிவிட்டார் என சொல்லிவிட்டுத்தான் அதிமுகவில் வந்து இணைந்துள்ளேன். சிறிதுகாலம் கூவத்தில் இருந்துவிட்டேன். அந்த கூவத்தின் நாற்றம் தாங்காமல் வெளியே வந்துவிட்டேன். இனி நடைபெற உள்ள நகர்ப்புற மற்றும் மாநகர உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிபெற பாடுபடுவோம்” எனக்கூறினார்.