அதிகரிக்கும் மானிய சுமை! பணக்கார விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து?

 

அதிகரிக்கும் மானிய சுமை! பணக்கார விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து?

பணக்கார விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய பஞ்சாப் மாநில அரசு தீவிர யோசனை செய்து வருகிறது.

விவசாயம் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் பஞ்சாப் ஒன்று. விவசாயிகளின் நலனை கருத்தில் விவசாயத்துக்கு இலவச மின்சாரத்தை அம்மாநில அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளை சிறு மற்றும் மார்ஜினல், நடுத்தர மற்றும் பெரிய அல்லது பணக்கார விவசாயிகள் என அம்மாநில வகைப்படுத்தியுள்ளது. அனைத்து பிரிவு விவசாயிகளுக்கும் மின்சாரத்தை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதனால் வேளாண்துறைக்கு வழங்கும் இலவச மின்சாரத்துக்காக மட்டும் ரூ.6,060 கோடியை அம்மாநில அரசு வழங்குகிறது.

விவசாய பணிகள்

அம்மாநிலத்தில் மொத்தம் 14.5 லட்சம் குழாய் கிணறுகள் உள்ளன. இதில் 20 சதவீதத்துக்கும் குறைவான குழாய்கிணறுகள் மட்டுமே சிறு விவசாயிகள் மற்றும் மார்ஜினல் விவசாயிகளுக்கு சொந்தமாக உள்ளது. அதேசமயம் 80 சதவீதத்துக்கு அதிகமான குழாய்கிணறுகள் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளிடம் உள்ளதாக கிராமபுற மற்றும் தொழில்துறை மேம்பாட்டின் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இலவச மின்சாரத்தால் குறைந்த அளவிலேயே சிறுவிவசாயிகள் பலன் பெறுகின்றனர். அதேசமயம் பணக்கார விவசாயிகள் அதிகளவில் பலன் பெறுகின்றனர்.

விவசாய பணிகள்

அதேசமயம் பஞ்சாப் அரசின் மின்சார மானியத்துக்கான செலவினம் அதிகரித்து வருகிறது. அதனால் பணக்கார விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை திரும்ப பெற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இலவச மின்சாரத்தை திரும்ப பெறுவது தொடர்பாக எந்தவொரு முடிவையும் அந்த கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. பெரிய விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை வாபஸ் பெற்றால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.