அதிகரிக்கும் குற்றங்கள்: தரவுகள் கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புதல்!

 

அதிகரிக்கும் குற்றங்கள்: தரவுகள் கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புதல்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளை பிடிக்க ஃபேஸ்புக் நிறுவனம் டெல்லி காவல்துறைக்கு உதவி செய்யஒப்புகொண்டுள்ளது.

புதுதில்லி: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளை பிடிக்க ஃபேஸ்புக் நிறுவனம் டெல்லி காவல்துறைக்கு உதவி செய்யஒப்புகொண்டுள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக ஃபேஸ்புக் உள்ளது.ஆனால்  பேஸ்புக் தரவுகள் திருடுபோவதாகவும், பாதுகாப்பானது அல்ல என்று  கடந்த ஆண்டு பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதே சமயம் கடந்த சில ஆண்டுகளாகப் பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்பட்ட குற்றங்களில், பெரும்பாலும் சமூக வலைதளங்களின் பயன்பாடு உள்ளதால் ஆதாரங்களை திரட்ட கடினமாக உள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது. 

இந்நிலையில் ஃபேஸ்புக் இந்தியா மற்றும் டெல்லி காவல்துறைக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில், குற்றவாளிகள் குற்றத்திற்காக பயன்படுத்திய சாட் (chat) விவரங்களை வழங்க ஃபேஸ்புக் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து குற்றவாளிகளின் தனிப்பட்ட chat விவரங்களை அளிக்க ஃபேஸ்புக் சம்மதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.