அதிகம் மது அருந்துபவரா நீங்கள்…அப்போ கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

 

அதிகம் மது அருந்துபவரா நீங்கள்…அப்போ கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

அருத்தும் போது தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் குறித்து இங்கு காண்போம்.

மதுப்பழக்கத்தை பொறுத்தவரை ஆண், பெண் வேறுபாடு எல்லாம் இல்லை. இன்றைய நவநாகரீக உலகில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள் என்பது தான் உண்மை. ஆண்களைப் போன்றே பெண்களும் அதிகமாக இன்றைக்கு மதுவை நாடிச்செல்வதற்கு ஆண் நபரின் தூண்டுதல் மற்றும் மரபுவழிப் பழக்கம் ஆகியவை காரணங்களாக அமைகின்றன.

மதுப்பழக்கத்துக்கு அடிமையாகும் விஷயத்தில் ஆண்களைக் காட்டிலும், பெண்களே அதிகளவில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. எனினும், உடல்நலத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் மதுவை பருகினாலும் அதனால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும் வகையில் அதற்கேற்றாற் போல் நடக்கின்றனர்.

மது அருந்திய பின்னர் அதிகளவில் உடல்நல பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க கீழ்கண்ட உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லதாகும். ஆல்கஹால் பலருக்கு அசிடிட்சியை ஏற்படுத்தும் என்பதால், மது அருந்திய பிறகு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுப் பொருட்களை உள்கொள்வது நல்லது. அதேபோல் ஆல்கஹால் அருந்தும் போது, சீஸ் நிறைந்த உணவுகளான பிட்சா, பாஸ்தா போன்றவற்றை அதிகம் உட்கொள்ளக் கூடாது. இத்தகைய உணவுகள் உடலுக்கு நன்மையற்ற மற்றும் எளிதில் செரிமானம் ஆகாத உணவுப் பொருட்கள் ஆகும். எனவே இவற்றை தவிர்ப்பது சிறந்த முடிவாக அமையும்.

மது அருந்தியிருக்கும் சமயங்களில் சாக்லேட்டுகளை உண்ணக் கூடாது. ஏனெனில், சாக்லேட்டில் கஃபைன், கொழுப்பு, மற்றும் கோகோ ஆகியவை கலந்திருப்பதால் வாயு பிரச்சனைகள் எழும். ஆரஞ்ச் போன்ற சிட்ரஸ் அமிலம் கொண்ட பழங்களையும் மது அருந்தியிருக்கும் நேரத்தில் உண்ணக் கூடாது. இவை தவிர – ஹாட் சாஸ், மிட்டாய்கள், ஃபிரைடு உணவுகள் உள்ளிட்ட உணவுகளையும் தவிர்ப்பது சாலச் சிறந்ததாகும்.