அதிகமாக பெண்கள் கொல்லப்படும் நாடு இந்தியா தான் – ஐநாவின் பகீர் அறிக்கை!

அதிகமாக பெண்கள் கொல்லப்படும் நாடு இந்தியா தான் – ஐநாவின் பகீர் அறிக்கை!

உலகிலேயே அதிக பெண்கள் கொல்லப்படும் நாடு என்ற பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

உலகிலேயே அதிக பெண்கள் கொல்லப்படும் நாடு என்ற பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பெண்கள் கொல்லப்படும் விகிதம் அதிகமாக உள்ளதாகவும், ஆண்கள் கொல்லப்படும் விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த  2017ஆம் ஆண்டு மட்டும் சுமார் 4,64,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவில் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 15, 196 ஆக இருந்த நிலையில், 2016ஆம் ஆண்டில் 18, 016 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் ஆண்களின் எண்ணிக்கை, 2006ஆம் ஆண்டில் 32, 971 ஆக இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டில் 24, 662 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, வரதட்சணைக் கொடுமை காரணமாக பெண்கள் அதிக அளவில் கொல்லப்படுவதாகவும், அண்மையில் பாலியல் வன்கொடுமையாலும் அதிக பெண்கள் மரணிக்கப்படுகின்றனர் என்றும் ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.