அதானே, இதுகூட இல்ல‌ன்னா அப்புறம் ட்ரம்ப்புக்கு என்ன மரியாதை?

 

அதானே, இதுகூட இல்ல‌ன்னா அப்புறம் ட்ரம்ப்புக்கு என்ன மரியாதை?

“மேரியாத்தா மேரியாத்தா, இந்த ட்ரம்ப் வந்துட்டு திரும்புற வரைக்கும் அந்தாளுகிட்டேர்ந்து என் கவுரவத்த‌ காப்பாத்துனா, என் கொள்ளுப்பேரனுக அத்தனை பேருக்கும் மொட்டை போட்டு காது குத்துறேன், காப்பாத்திடு மேரியாத்தா” என்ற ராணியின் வேண்டுதலுக்கு செவிசாய்க்கப்படவில்லை.

எங்கப் போனாலும் எது செஞ்சாலும் என்ன பேசினாலும் ஏதாவது ஒரு வில்லங்கம் கேட்காமலேயே இலவச இணைப்பாக வந்துசேர்வதுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஜாதகம். பத்ரிகையாளர்கள் சந்திப்பாகட்டும், வெளிநாட்டு அதிபர்கள்/பிரதமர்கள் வருகையாகட்டும், உலக மாநாடுகளாகட்டும், ட்ரம்ப் இருக்குமிடத்தில் ஒரு அசாதாரண நிகழ்வு இல்லாமல் நிகழ்ச்சி முடிவுபெறாது. இப்படியாக ஒருபக்கம் இருக்க, அரசுமுறை பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபர் இங்கிலாந்துக்கு வருகை தருகிறார் என்றவுடன், அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைவிடவும் அதிகம் தூக்கம் தொலைத்தது எலிசபெத் மகாராணியாகத்தான் இருக்கமுடியும். காரணம், இங்கிலாந்தில் அரச குடும்பத்தினர் அதுவும் ராணி எலிசபெத் என்றால், தலையால் கும்பிட்டு வணக்கம் வைப்பார்கள். அரச குடும்பத்தினரும் அப்படியே கெத்தை மெயின்டெய்ன் பண்ணிக்கொண்டு பால்கனியில் நின்று தரிசனம் தந்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள். ஆனால், ட்ரம்ப் வருகிறார் என்றவுடன் மகாராணிக்கு வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டிருக்கும். காரணம் ட்ரம்ப்பின் எஸ்.டி.டி. அப்படி!

Trump with Queen Elizabeth

“மேரியாத்தா மேரியாத்தா, இந்த ட்ரம்ப் வந்துட்டு திரும்புற வரைக்கும் அந்தாளுகிட்டேர்ந்து என் கவுரவத்த‌ காப்பாத்துனா, என் கொள்ளுப்பேரனுக அத்தனை பேருக்கும் மொட்டை போட்டு காது குத்துறேன், காப்பாத்திடு மேரியாத்தா” என்ற ராணியின் வேண்டுதலுக்கு செவிசாய்க்கப்படவில்லை. ட்ரம்ப்புக்கும் அவர் மனைவிக்குமான விருந்து நிகழ்ச்சியின்போது, ராணியின் முதுகில் ஆதரவாக(த்தான்) கைவைத்து போஸ் கொடுத்தார் ட்ரம்ப். ராணி நடந்துவந்தால் பத்தடிக்கு பக்கத்தில் வரவே யோசிக்கும் நாட்டில், ராணியை தொட்டுப்பேசுவது மரியாதை குறைவான செயலாகவே பார்க்கப்படும். ஆனால், ராணி பெரிதாக ஒன்றும் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஏன் சொல்லுங்க பாப்போம்?

Trump pats Queen Elizabeth

“இந்தாளு இத்தோட நிறுத்திக்கிட்ட வரைக்குமே எனக்கு சந்தோசம், ஏதாவது உளறிக்கொட்டி என்னை அசிங்கப்படுத்திடுவானோன்னு பக்னு இருந்துச்சி, சீக்கிரம் இந்தாளு புடிச்சிகிட்டு போங்கடா” என்பதாக இருந்திருக்கும் ராணியின் மைண்ட்வாய்ஸ்!