அதர்வாவுடன் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி

 

அதர்வாவுடன் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி

அத்தனையும் கடந்து தான் இறுதியாக லாவண்யா திரிபாதியை இந்த கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்தோம்.

புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிக்கவுள்ள  புதிய படத்தில் நாயகியாக நடிகை  லாவண்யா திரிபாதி ஒப்பந்தமாகியுள்ளார்.

ttn

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, கலை படத்தொகுப்பு செய்கிறார்.  

ttn

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா பேசும் போது, ‘எங்கள் படத்திற்கு ஹீரோயின் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமான பணியாக இருந்தது. நல்ல கவர்ச்சியான, மென்மை மிகுந்த நேர்த்தியான, நாயகியாக இருக்க வேண்டும் தேடினோம். அதே நேரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கும் திறமையும் வேண்டும். ஏனென்றால் இது படம் முழுதும் பயணம் செய்யும் அழுத்தமான சக்தி வாய்ந்த பாத்திரம். யோசித்துக்கொண்டிராமல் தெளிவாக முடிவையும், வில்ல பாத்திரத்தை  நேரடியாக கேள்விக்குள்ளாக்கும் கனமான பாத்திரமாக இப்படத்தில் இருக்கும். இத்தனை குணங்கள் நிறைந்த வலுவான பாத்திரத்திற்கு பல ஹீரோயின்களை யோசித்து அலசி,  அவர்களை  தேர்வு செய்ய கருத்தில் கொண்டோம். அத்தனையும் கடந்து தான் இறுதியாக லாவண்யா திரிபாதியை இந்த கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்தோம். இந்தப்படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக இருக்குமென்பது உறுதி’ என்றார். 

ttn

இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள், படப்பிடிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.