அண்ணா நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

 

அண்ணா நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் 50ஆவது நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அண்ணா புற்று நோய் காரணமாக கடந்த 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மரணமடைந்தார். இன்றோடு இந்த உலகை விட்டு அண்ணா மறைந்து  50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் சமூகத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்து தமிழக மக்களின் நினைவில் என்றும் நீங்காத பெரும் அறிஞராக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

anna

இந்நிலையில் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

anna

முன்னதாக  அண்ணா நினைவிடத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.