அண்ணா சொன்ன ஆறு வகை எழுத்தாளர்கள்!

அண்ணா சொன்ன ஆறு வகை எழுத்தாளர்கள்!

அண்ணாதுரை, அவரே ஒரு எழுத்தாளர்,ஆங்கிலத்தில் தி ரைசிங்சன் , தமிழில் காஞ்சி என்று பத்திரிகைகள் நடத்தியவர். நாடகம், வரலாறு, நாவல், சிறுகதை, திரைக்கதை என்று எழுத்தின் அத்தனை சாத்தியங்களையும் முயன்று, அதிலும் சாதனைகள் செய்தவர். அவர் தனது வழக்கமான கிண்டல் கலந்த தொனியில் எழுத்தாளர்களை அறு சுவையாக அறிமுகம் செய்கிறார்,பாருங்கள். 

tamil-books

1) தன் மனதில் தோன்றுவதை எழுதி யாருக்கு எது தேவையோ எடுத்துக் கொள்ளட்டும் என எழுதும் 
” அலை ” எழுத்தாளர்கள்.

2) புராணக்கதைகளுடன் கற்பனை கலந்து எழுதும் “கலை ” எழுத்தாளர்கள்.

3) இவ்வளவு பணம் கொடுத்தால், இப்படி எழுதுவேன், என ஊதியத்திற்கு ஏற்றபடி எழுதும் “விலை” எழுத்தாளர்கள்.

4) ஒருநாள் எழுதாவிட்டால் ஊதியம் கிடைக்காது, அதனால் வீட்டில் உலை கொதிக்காதே என எழுதும் “உலை” எழுத்தாளர்கள்.

5) அழகிய நடையில் உள்ளங்களைக் கவர்ந்து, ஆதாயம் தேடும் “வலை” எழுத்தாளர்கள்.

6) எப்போதும் சரியான நிலையில் நின்று எழுதும் “நிலை” எழுத்தாளர்கள்.

படித்து விட்டீர்களா, இப்போது இந்த வரிசையில் இன்றைய எழுத்தாளர்களில் யாருக்கு எந்த இடம் என்று சிந்தித்துப் பாருங்கள். இது எல்லா மொழி எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.