அண்ணா உங்கள் குட்டி கதையால் அரசியல் வருகையை உறுதியாக்கு! விஜய்யிடம் ரசிகர்களின் அன்புக்கட்டளை

 

அண்ணா உங்கள் குட்டி கதையால் அரசியல் வருகையை உறுதியாக்கு! விஜய்யிடம் ரசிகர்களின் அன்புக்கட்டளை

ரஜினிக்கு அடுத்தபடியாக விஜயின் குட்டி கதைக்கு வெயிட்டிங்கில் இருக்கும் விஜய் ரசிகர்கள், மாஸ்டர் பட இசை வெளியீட்டில் விஜய் அரசியல் வருகை அறிவிப்பினை அளிக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் விஜய் நடித்து திரைக்குவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகின்ற மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் நடிகர் விஜய் தனது ஒவ்வொரு படம் இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் மத்தியில் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும், அதனால் தனக்கு ஏற்படும் அரசியல் நெருக்கடிகள் குறித்தும் பேசிவருக்கிறார். இதனால் நடிகர் விஜய்க்கு எதிராக வழக்கு தொடர்வது, பட ரிலீஸில் சிக்கல் போன்ற செயல்களில் சில கட்சியினர் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

vijay poster

குறிப்பாக கடந்த பிகில் படத்தின் இசை வெளியீட்டில் விஜய் பேசியதற்கு அதிமுக அமைச்சர்கள் விஜய்க்கு எதிராக கண்டனத்தை வெளிப்படுத்தினர். மேலும் மத்திய அரசு வருமான வரித்துறையினரை ஏவி தொடர்ந்து நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனையை நடத்தியது. 

அந்தவகையில் நடைபெற உள்ள மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழாவின்போது நடிகர் விஜய் ஐடி ரெய்டு தொடர்பாக பேசுவார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்நிலையில் மதுரையில் , “மொத்த ஜனங்களில் ஒத்த எதிர்பார்ப்பு, அண்ணா உங்கள் குட்டி கதையால் அரசியல் வருகையை உறுதியாக்கு” என்ற வசனங்கள் அடங்கிய போஸ்டரை ஒட்டியுள்ளனர்.