அண்ணன் திருமாவை தரம் தாழ்த்தும் உங்கள் எண்ணம் ஈடேறாது : பா.ரஞ்சித் ஆதரவு!

 

அண்ணன் திருமாவை  தரம் தாழ்த்தும்  உங்கள் எண்ணம் ஈடேறாது : பா.ரஞ்சித் ஆதரவு!

அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் என்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. 

சமீபத்தில் அயோத்தி தீர்ப்பு குறித்து பேசிய திருமாவளவன்,  பாபர் மசூதி இருந்த இடத்தில் தொல்லியல்துறை நடத்திய ஆராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அது என்ன கோயில் என்பது தெரியாது.ஆனால்  அதன் கட்டமைப்பை வைத்து அது என்ன கோயில் என்பதை தெரிந்து கொள்ளலாம். குவி மாடமாக இருந்தால் அது மசூதி. கூம்பு வடிவமாக இருந்தால் அது தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் என்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. 

thiruma

ஆனால்  நான் பாஜகவுக்கு எதிராக பேசினேன். இந்துக்களுக்கு எதிராக பேசவில்லை. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் அதற்காக  நான் வருந்துகிறேன் என்று மன்னிப்பு கேட்டார்.இருப்பினும் பாஜக ஆதரவாளர்கள் திருமாவளவனை திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில் திருமாவளவனுக்கு ஆதரவு கூறியுள்ள இயக்குநர்  பா. ரஞ்சித், ‘ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும்.ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள்,தனிமனித தாக்குதல்கள்&அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது.அண்ணன் திருமா அவர்களை தரம் தாழ்த்தும் முற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும்  ஈடேறப்போவதில்லை!’ என்று குறிப்பிட்டுள்ளார்.