அண்ணனை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு இழுத்துச் சென்ற தங்கை! ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் உயிரிழப்பு!

 

அண்ணனை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு இழுத்துச் சென்ற தங்கை! ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் உயிரிழப்பு!

தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையில் இருக்கும் கிராமம் சுத்துக்கேணி. தமிழகத்தின் எல்லைக்குள் வரும் இந்த கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் அங்கிருக்கும் செங்கல் சூளை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திடீரென சுப்பிரமணிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் எல்லைப் பகுதியிலேயே இருப்பதால், வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் புதுவை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் உதவி கேட்கப்பட்டது. 

ஆம்புலன்ஸ் சேவை மறுப்பு

சுப்பிரமணி வசித்து வரும் சுத்துக்கேணி கிராமம் தமிழகத்தின் எல்லைக்குள் வருவதால், ஆம்புலன்ஸ் உதவியை வழங்குவதற்கு புதுச்சேரி அரசு மறுத்து விட்டது.  கண்ணெதிரே அபாய கட்டத்தில் தனது அண்ணன் உயிருக்குப் போராடி வருவதை தாங்கிக் கொள்ள முடியாமல், செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் அண்ணனைப் படுக்க வைத்து அவசர அவசரமாக புதுவையில் இருக்கும் மருத்துவமனைக்கு அவரது தங்கை அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் சுப்பிரமணியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள். தள்ளுவண்டியில் வைத்து அண்ணனை அவசர அவசரமாக அழைத்து வந்தும் காப்பாற்ற்ற முடியாததைத் தொடர்ந்து அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது