அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

 

அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப் பெறவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப் பெறவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா 2018-ல் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். தமிழக நலன் குறித்து அணை பாதுகாப்பு மசோதாவில் கருத்தில் கொள்ளப்படவில்லை.அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக தமிழகம் வைத்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே, அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப் பெறவேண்டும்.

மாநிலங்களின் கருத்துக்களை கேட்காமல் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த மசோதவால் ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால் அந்த அணையின் உரிமை பறிபோகும் என கூறியுள்ளார்.