அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்த நாள்..இன்று தேசிய தொழில் நுட்ப தினம்…

அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்த நாள்..இன்று தேசிய தொழில் நுட்ப தினம்…

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதத்திலும்,புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் விதத்திலும், வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கிலும் மே 11ஆம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது. 

tech

1998-ஆம் ஆண்டு,ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில், மே 11-ஆம் தேதியும்,மே 13-ஆம் தேதியும்  இரண்டு அணுகுண்டு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது.இதன் மூலம் உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக மே 11 ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது.

tech

இந்த அணுகுண்டு சோதனைகள் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு தரப்பட்ட வணிகத்தடைகளை விதிப்பதற்கு காரணமாக அமைந்தன. அந்நாளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றிய – (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) டாக்டர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். 

tech

இந்த நாளை நினைவுறுத்துமாறுதான் ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுது 

-ஷோபா