அணியில் இடம்பிடித்தாலும் தோனியின் நிலை இனி இது தான்…? புதிய சர்ச்சையை கிளப்பும் பி.சி.சி.ஐ !!

அணியில் இடம்பிடித்தாலும் தோனியின் நிலை இனி இது தான்…? புதிய சர்ச்சையை கிளப்பும் பி.சி.சி.ஐ !!

முன்னாள் கேப்டனான தோனிக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைத்தாலும், ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
கிரிக்கெட்டில் உப்புமா கிண்டி கொண்டிருந்த இந்திய அணியை, கிரிக்கெட் உலகின் வல்லரசாக்கியவர் முன்னாள் கேப்டன் தோனி தான் என்றால் அது மிகையாகாது. 

dhoni

இந்திய அணிக்கு மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று ஒரே கேப்டனான தோனி, கடந்த மூன்று வருடத்திற்கு தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விராட் கோஹ்லியின் தலைமையில் சாதரண ஒரு வீரராக விளையாடி வருகிறார். 

dhoni

தோனிக்கு 38வயதாகி விட்டதால் தோனி நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று கருதப்பட்ட நிலையில், தோனி இதுவரை தனது ஓய்வு குறித்து எதுவும் அறிவிக்காததால் 2020ம் ஆண்டு டி.20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு தோனியை படிப்படியாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்ட பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

dhoni

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் தோனி முதன்மையாக விக்கெட் கீப்பராக செல்லமாட்டார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட்க்கு இனி வாய்ப்பு அளிக்கப்படும். அந்த நேரத்தில் ரிஷப் பண்ட்க்கு தோனி வெளியில் இருந்து ஆலோசனை கூறுவார் என பி.சி.சி.ஐ.,யின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.