’அட போங்க பாஸ், வேற வேலை இருக்கு’…பிக் பாஸைக் கண்டு தெறித்து ஓடும் பிரபலங்கள்…கமல் ஷாக்…

 

’அட போங்க பாஸ், வேற வேலை இருக்கு’…பிக் பாஸைக் கண்டு தெறித்து ஓடும் பிரபலங்கள்…கமல் ஷாக்…

முதல் இரண்டு சீஸன்களுக்கு இருந்த மவுசு ‘பிக் பாஸ் 3’க்கு இல்லாமல் போயிருப்பது கண்டு கமல் பாஸும் விஜய் டிவி நிர்வாகமும் அதிர்ந்துபோயிருப்பதாக நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

முதல் இரண்டு சீஸன்களுக்கு இருந்த மவுசு ‘பிக் பாஸ் 3’க்கு இல்லாமல் போயிருப்பது கண்டு கமல் பாஸும் விஜய் டிவி நிர்வாகமும் அதிர்ந்துபோயிருப்பதாக நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

kamal in bigg boss 3

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23ம் தேதி முதல்  ஒளிபரப்பாகவிருக்கிறது என்று விஜய் டிவியினர் அதிகாரபூர்வமாக  அறிவித்திருக்கிறார்கள்.அதை அறிவித்து விட்டு அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதாம்.

அந்தப்பணிகளின்போது முதலிரண்டு பாகங்களின் போது இல்லாத வகையில் புதிய அதிர்ச்சியைச் சந்திக்கிறதாம் தேர்வுக்குழு.முதலிரண்டு பாகங்களின் போது நிகழ்ச்சியில் கலந்து நான் நீ எனப் போட்டிபோட்டுக் கொண்டு நடிகர்கள் வந்தார்களாம். ஆனால் இம்முறை வளரும் நடிகர்கள் சிலரை அணுகியபோது,’ ஆளைவிடுங்க பாஸு வேற வேல நிறைய இருக்கு’ என ஒதுங்கிக் கொண்டார்களாம். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதால் கிடைக்கும் பலனைவிட பலவீனமே அதிகம் என்பதால் பலரும் பின்வாங்குகிறார்களாம்.

kamal in bigg boss 3

இந்நிலையில் சுமார் 3 பேர் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களைத் தேர்வு செய்வதற்கு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறதாம் பிக் பாஸ் 3’ குழு. வதந்திகளாக வந்த செய்திகளை உண்மையாக்கிவிட்டு நாமும் பேசாமல் இந்த மூன்றாவது சீஸனிலிருந்து எஸ்கேப் ஆகியிருக்கலாமோ என்று மைண்ட் வாய்சில் மருகுகிறாராம் கமல்.