அட.. ஓய்வுக்கு பின் விராத் கோலி செய்யப்போகும் காரியம் இது தான் – தனியார் நிகழ்ச்சியில் கோலி பேட்டி!

 

அட.. ஓய்வுக்கு பின் விராத் கோலி செய்யப்போகும் காரியம் இது தான் – தனியார் நிகழ்ச்சியில் கோலி பேட்டி!

“ஓய்வுக்கு பின்னர் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

ஓய்வுக்குப் பின்னர் நான் இதைத்தான் செய்ய விரும்புகிறேன் என தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருக்கிறார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிய டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஓய்வு நேரத்தை தனது மனைவியுடன் செலவழித்து வந்த விராட் கோலி, பிறந்தநாளன்று வெளிநாடு சென்று இயற்கையுடன் நேரத்தை களித்ததாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். 

அதன் பிறகு டெல்லி திரும்பிய விராட்கோலி தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ஓய்வுக்கு பின்னர் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 

virat

அவர் பேட்டி அளித்ததாவது: நான் சிறுவயதிலிருந்தே உணவு பிரியன். நான் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவன். பொதுவாக பஞ்சாபி மக்கள் உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். அதேபோலத்தான் என் வீட்டிலும். வீட்டில் மட்டுமல்லாது வெளியிலும் ஜங்க் புட் எனப்படும் உணவுகளை விரும்பி உண்பேன். குறிப்பாக சோழா பூரி, பானி பூரி, பன்னீர் பட்டர் மசாலா போன்றவை அதிகம் விரும்பி உண்பேன். எனது குடும்பம் டெல்லிக்கு இடம் பெயர்ந்து விட்டதால் சிறுவயதிலிருந்தே டெல்லி உணவுகளுக்கு பழக்கப்படுத்திக் கொண்டேன். குறிப்பாக டெல்லி சாலையோரங்களில் இருக்கும் ஸ்நாக்ஸ்களை விரும்பி சாப்பிடுவேன். அடிக்கடி நண்பர்களுடன் இதற்காக வெளியில் செல்வதும் உண்டு. 

எனக்கு நன்றாக சமைக்கத் தெரியாது. ஆனால் உணவின் சுவையை நன்கு அறிவேன். என்ன குறை உணவில் இருக்கிறது என்பதை ஒருமுறை சாப்பிட்டு பார்த்து சொல்லிவிடுவேன். இதனால் தற்போது சமைக்க கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் வந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் அதிகம் கவனம் தேவை என்பதால் அதனை ஓய்விற்குப் பிறகு செய்ய விரும்புகிறேன். சமைக்க  கற்றுக்கொண்டு சமையலில் இறங்க தயாராக இருக்கிறேன் என்றார். 

virat

தனது தற்காலிக ஓய்வு நேரத்தை முடித்துக் கொண்ட விராட் கோலி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறார். முதல் போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.