அட, இது புது புள்ளிவிபரம்! – நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்காத 216 மாவட்டங்கள்

 

அட, இது புது புள்ளிவிபரம்! – நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்காத 216 மாவட்டங்கள்

இந்தியாவில் 216 மாவட்டங்களில் இதுவரை கொரோனா வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

இந்தியாவில் 216 மாவட்டங்களில் இதுவரை கொரோனா வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. இதில் 42 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் எந்தவொரு தொற்றுநோயும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 21 நாட்களில் 29 மாவட்டங்களில் எந்த கொரோனா வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பட்டியல் பின்பற்றப்பட்டால் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ttn

சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் பேசுகையில், “இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 29.36 சதவீதமாக உள்ளது. 16,540 கொரோனா நோயாளிகள் இதுவரை குணமாகியுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் 1,273 பேர் குணமடைந்து உள்ளனர்.

இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,390 கொரோனா வழக்குகள் மற்றும் 103 இறப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 56,342 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,886 ஆகவும் உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.