அட இதுவும் வளர்ச்சிதாங்க! 31 நாட்களில் உள்நாட்டு விமானங்களில் பறந்த 1.20 கோடி பேர்….

அட இதுவும் வளர்ச்சிதாங்க! 31 நாட்களில் உள்நாட்டு விமானங்களில் பறந்த 1.20 கோடி பேர்….

கடந்த மே மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் மொத்தம் 1.20 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 2 சதவீதம் அதிகம்.

மக்களின் பயணத்தை நேரத்தை குறைத்ததில் விமானங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. உதாரணமாக தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பஸ் அல்லது ரெயிலில் செல்வதாக இருந்தால் குறைந்தபட்சம் 10 மணி நேரமாவது ஆகும். அதேசமயம் விமானம் என்றால் 3 மணி நேரத்தில் சென்று விடலாம். பரபரப்பான இந்த உலகத்தில் விமான சேவை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான்.

கடந்த மே மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் மொத்தம் 1.20 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 2 சதவீதம் அதிகம்.

flight

மக்களின் பயணத்தை நேரத்தை குறைத்ததில் விமானங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. உதாரணமாக தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பஸ் அல்லது ரெயிலில் செல்வதாக இருந்தால் குறைந்தபட்சம் 10 மணி நேரமாவது ஆகும். அதேசமயம் விமானம் என்றால் 3 மணி நேரத்தில் சென்று விடலாம். பரபரப்பான இந்த உலகத்தில் விமான சேவை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான்.

flight

கட்டண சலுகைகள்

இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. விமான சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் போட்டி போட்டு பயண கட்டண சலுகைகள் அறிவிப்பதால் பயணிகள் விமானத்தில் செல்வதை விரும்ப தொடங்கி வருகின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட்ஏர்வேஸ் அண்மையில் தனது விமான சேவையை நிறுத்தியது. இதனால் அந்த விமானங்களில் செல்ல முன்பதிவு செய்து வைத்திருந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர். பல பயணிகள் வேறு நிறுவனங்களின் விமானங்களின் சேவையை பயன்படுத்தினர். அதேசமயம் பல பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்தனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.

passenger

2 சதவீதம் அதிகம்

இருப்பினும், கடந்த மே மாதத்தில்  உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியது. கடந்த மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 1.20 கோடி பேர் பயணம் செய்தனர். இது 2018 மே மாதத்தை காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மே மாதத்தில் 1.18 கோடி பேரை உள்நாட்டு விமானங்கள் சுமந்து சென்றுள்ளன. 

ஜெட்ஏர்வேசுக்கு பதிலாக மற்ற நிறுவனங்களின் விமான சேவையை பயணிகள் பயன்படுத்தியது, விடுமுறை காலம், விமான நிறுவனங்கள் கூடுதலாக விமானங்களை இயக்கியது போன்ற காரணங்களால் கடந்த மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.