அட்லீ நிறம்: கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள்!

 

அட்லீ நிறம்: கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள்!

இயக்குநர் அட்லீ நிறத்தை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு விஜய் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

சென்னை: இயக்குநர் அட்லீ நிறத்தை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு விஜய் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லீ. இவர் தமிழ் திரையுலகில் மூன்று படங்களை மட்டும் இயக்கியுள்ளார். அதில் இரண்டு படங்கள் தளபதி விஜய்யை வைத்து இயக்கி உள்ளார். தற்போது மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து தளபதி 63 இயக்கி வருகிறார்.

atlee

இவரின் படங்களில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஐபில் போட்டி பார்க்க அட்லீ தனது மனைவி பிரியாவுடன் சென்றுள்ளார். இதையடுத்து  இவரும் நடிகர் ஷாருக்கானும் பக்கத்தில் உட்கார்ந்து ஐபில் மேட்ச் பார்த்துள்ளார்கள்.

அதை பார்த்த சில நெட்டிசன்கள் அட்லீ நிறத்தை பற்றி கண்ட மேனிக்குக் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர் ஒருவர் பதிவு வெளியிட்டுள்ளார், ‘மூன்றே படம் இயக்கிய ஒரு இயக்குநர், இந்தியாவின் மிகப்பெரிய நடிகரின் உடன் அமர்ந்து மேட்ச் பார்ப்பது யெல்லாம் அவர் உழைப்பின் வளர்ச்சியே.. ஒருவரின் உருவத்தையும் அவரின் நிறத்தையும் வைத்து பேசும் முன், அவரின் வெற்றின் உயரத்தை அவர்த்தொட்ட உயரம் .இன்று பலபேரின் கனவு’ என்று பதிலடி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: ”பிரபு, சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா கஸ்தூரி?”… விளாசும் லதா எம்.ஜி.ஆர்…